Thursday, July 16, 2015
Vishal Paayum Puli Tamil Movie
கைமாறியது விஷாலின் பாயும்புலி
சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் பாயும்புலி படத்தை வேந்தர்மூவிஸ் மதன் தயாரித்திருக்கிறார். செப்டம்பர் நான்காம்தேதி படம் வெளியிடப்படும் என்று அறிவித்துவிட்டார்கள். இந்நிலையில் அந்தப்படத்தை வாங்கி வெளியிடும் உரிமையை வேந்தர்மூவிஸ் மதனிடமிருந்து எஸ்கேப்ஆர்டிஸ்ட் மதன் வாங்கியிருக்கிறாராம்.
மற்றவர்கள் தயாரித்த படங்களை வாங்கி வெளியிடுகிற அளவுக்கு உள்ள வேந்தர்மூவிஸ் நிறுவனம்தான் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கிறதென்றாலும் எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனத்துக்கு வெளியிடும் உரிமையைக் கொடுக்கக் காரணம் அந்நிறுவனம் பெரியஅளவில் விளம்பரங்கள் செய்து படத்தைப் பேசவைக்கும் என்பதுதான் காரணம் என்று சொல்லப்படுகிறது.
சுசீந்திரன் இயக்கத்தில் உருவான அழகர்சாமியின்குதிரை படத்தைத் தயாரித்த எஸ்கேப்ஆர்டிஸ்ட் நிறுவனம் மீண்டும் அவர் இயக்கிய படத்தை வாங்கிவெளியிடுவது குறிப்பிடத்தக்கது.
இந்தப்படத்தின் மீதும் பாடல்கள் மேலும் உள்ள நம்பிக்கை காரணமாக படத்தை வெளியிடும் உரிமையை பெரும்தொகை கொடுத்து மொத்தமாக எஸ்கேப்ஆர்டிஸ்ட் வாங்கியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)


